தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் STR.கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு முன் செம பருமனாக இருந்த STR இந்த படத்திற்கு செம ட்ரான்ஸ்பரமேஷன் எடுத்திருந்தார் சிம்பு.இவரது லுக் படத்தில் பழைய சிம்புவை பார்ப்பது போல உள்ளது என்று பலரும் தெரிவித்திருந்தனர்.

ஈஸ்வரன் படம் பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பாண்டியநாடு,ஜீவா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார்.மாதவ் மீடியா ஒர்க்ஸ் மற்றும் D கம்பெனி இணைந்து தயாரிக்கின்றனர்.நிதி அகர்வால் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

பாரதிராஜா,முனீஷ்காந்த்,நந்திதா ஸ்வேதா,பாலசரவணன்,மனோஜ் பாரதிராஜா,ஸ்டன் சிவா,அருள்தாஸ்,காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.

இந்த படத்தின் பெரிய ஹிட் பாடல்களில் ஒன்று மாங்கல்யம்.இந்த பாடலை சிலம்பரசன் பாடியிருப்பார்.ரிலீஸ் ஆனது முதலே இந்த பாடல் செம ட்ரெண்ட் அடித்தது , வீடியோ வெளியானதும் சிம்புவின் நடன அசைவுகளோடு பாடல் செம ரீச் ஆனது.இந்த பாடல் வீடியோ யூடியூப்பில் 150 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.