தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக இருந்து வருவது ஜீ தமிழ்.இந்த தொலைகாட்சிக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ரசனை அறிந்து தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர்.

இவர்களின் வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கென்றே பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது,உலகெங்கிலும் செம ஹிட் அடித்த Survivor தொடரை ஜீ தமிழ் தமிழில் ஒளிபரப்புகின்றனர்.ஒரு தீவில் போட்டியாளர்கள் சில நாட்கள் தங்கவிட்டு அங்கு அவர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்களை முடித்து இறுதிவரை தாக்குப்பிடிக்கும் போட்டியாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

போட்டியாளர்களின் மனவலிமை மற்றும் உடல்வலிமையை சோதிக்கும்படி இந்த போட்டி இருக்கும்.இந்த நிகழ்ச்சியின் மூலம் நேயர்களுக்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தை கொடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாக ஜீ தமிழ் தெரிவித்துள்ளனர்.Survivor நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார்.


அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் யார் என்று அறிமுகப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி குறித்த புதிய ட்ரைலர் ஒன்றை ஜீ தமிழ் வெளியிட்டுள்ளனர்,இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் உமாபதி ராமையா,நந்தா,விக்ராந்த்,நடிகர் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் பெசன்ட் ரவி, நடிகைகள் விஜயலக்ஷ்மி,ஸ்ருஷ்டி டாங்கே,காயத்ரி ரெட்டி மற்றும் நமது கலாட்டா நிறுவனத்தின் பிரபல VJ வான பார்வதி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 12ஆம் தேதி முதல் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.