தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக கற்றுக்கொள்ளும் சிலம்பரசன் கடைசியாக இந்த வருடம் பொங்கல் விருந்தாக வெளிவந்த ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு கதாநாயகியாக, நடிகை நிதி அகர்வால் நடித்திருந்தார்.

அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கும் மாநாடு திரைப்படம் தயாராகி வருகிறது.இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள  மாநாடு திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்துள்ளார். 

மாநாடு திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, நடிகர்கள் S.A.சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.இவர்களுடன் நடிகர் S.J.சூர்யா மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வெளிவந்த மாநாடு படத்தின்  டீசர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. விரைவில் மாநாடு திரைப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் நடிகர் சிலம்பரசனின் புதிய லுக் தற்போது வெளியானது. 

நடிகர் சிலம்பரசன் வீட்டில் சமையல் செய்யும் இந்த புதிய வீடியோவில் மிகவும் ஸ்மார்ட்டான புதிய லுக்கில் இருக்கிறார். க்ளீன் சேவ் லுக்கில் சிலம்பரசன் இருக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ட்ரெண்டிங் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Silambarasan TR (@silambarasantrofficial)