இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படமாக உருவாகியுள்ளது மாநாடு திரைப்படம் தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்திருக்கும் மாநாடு திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது.மாநாடு திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து நடிகை  கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். 

இயக்குனர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மேலும் நடிகர்கள் கருணாகரன், பிரேம்ஜி அமரன் உடன் இணைந்து இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
 
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக வெளியான மாநாடு திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் இதன் முதல் பாடலுக்காக வெகுநாட்களாக ரசிகர்கள் காத்திருந்தனர்..

இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் முதல் பாடலாக மெஹரஸைலா என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அழகான ரொமான்டிக் பாடலாக வெளிவந்திருக்கும் மெஹரஸைலா பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா,பவதாரணி பாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகி உள்ள இந்த பாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.