எதிர்பார்ப்புகளை எகிறவைக்கும் தளபதி 65 ஃபர்ஸ்ட்லுக் ப்ரோமோ !
By Aravind Selvam | Galatta | June 20, 2021 20:46 PM IST
தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2021 பொங்கல் அன்று மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.கொரோனாவுக்கு பிறகு வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மாஸ்டர்.
மக்கள்செல்வன் விஜய்சேதுபதி இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.மாளவிகா மோஹனன்,கௌரி கிஷான்,சாந்தனு,பூவையார்,அர்ஜு
இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு Gerogia-வில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருந்தது ஆனால் கொரோனா காரணமாக இந்த ஷூட்டிங் தள்ளிப்போனது.படத்தின் இயக்குனர் நெல்சன் பிறந்தநாள் 21ஆம் தேதியும் படத்தின் நாயகன் விஜயின் பிறந்தநாள் 22ஆம் தேதியும் வருவதை அடுத்து , படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பர்ஸ்ட்லுக் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் வேளையில் தற்போது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டும் வகையில் சன் பிக்சர்ஸ் ஒரு புதிய பர்ஸ்ட்லுக் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.
Can't wait? Konjam chill pannu maapi! 😉
See you tomorrow at 🕕#Thalapathy65FLTomorrow @ 6pm#Thalapathy65FirstLook #Thalapathy65@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja pic.twitter.com/8i9ryCanZB— Sun Pictures (@sunpictures) June 20, 2021
Thalapathy 65 surprise mass promo before first look release - Big Breaking!
20/06/2021 06:29 PM
Good news for Tamil cinema fans - Tamil Nadu government's breaking decision!
20/06/2021 03:29 PM