பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் சித்தார்த்,  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து பல திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் NH4, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களில் நடித்தார். குறிப்பாக காவியத்தலைவன் & எனக்குள் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் இவரது சிறந்த நடிப்புக்கு உதாரணம்.

பாலிவுட்டில் நடிகர் ஆமிர் கான் உடன் இணைந்து நடித்த ரங் தே பசந்தி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்த சித்தார்த், மலையாளத்திலும் கம்மாற சம்பவம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கடைசியாக இயக்குனர் சசியின் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து சிகப்பு மஞ்சள் பச்சை திரை படத்தில் நடித்திருந்தார். 

அடுத்ததாக இவரது நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் மஹா சமுத்திரம் என்ற திரைப்படம் தயாராகி வருகிறது இயக்குனர் அஜய் பூபதி இயக்கும் மஹா சமுத்திரம் திரைப்படத்தில் நடிகர் சித்தார்த்துடன் இணைந்து நடிகர் சர்வானந்த், அதிதி ராவ் ஹைடாரி, அனு இமானுவேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கேஜிஎஃப் பட புகழ் கருடா ராம் வில்லனாக நடிக்கிறார். 

A.K. என்டர்டெயின்மென்ட் சார்பில் அணில் சங்கரா தயாரிக்கும் மஹா சமுத்திரம் படத்திற்கு சைட்டன் பரத்வாஜ் இசை அமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் வெளியானது. மஹா சமுத்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறைவு பெற்றுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 

விரைவில் டீசர் & ட்ரெய்லர் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் 19-ம் தேதி இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்படுகிறது. அடுத்ததாக நடிகர் சித்தார்த் மீண்டும் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்2 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.