பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சசி அடுத்ததாக சித்தார்த் மற்றும் ஜீ.வி.பிரகாஷ் இருவரையும் இணைத்து ஒரு படம் இயக்குவார் என்று 2016-ல் அறிவிக்கப்பட்டது.அனால் சில காரணங்களால் தள்ளிப்போன இந்த படம் கடந்த ஆண்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Siddharth GV Prakash Film Under Sasi Direction Titled Sivappu Manjal Pachai

சித்தார்த்துக்கு ஜோடியாக மலையாளத்தின் முன்னணி நடிகையான லிஜோ மோள் நடிக்கிறார்.சித்து குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.அபிஷேக் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.இந்த படத்தின் டைட்டிலை படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.

Siddharth GV Prakash Film Under Sasi Direction Titled Sivappu Manjal Pachai

சிவப்பு மஞ்சள் பச்சை என இந்த படத்திற்கு படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் சித்தார்த் டிராபிக் போலீசாகவும்,ஜீ.வி.பிரகாஷ் பைக் ரேஸராகவும் நடிக்கின்றனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.இந்த டைட்டில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

Siddharth GV Prakash Film Under Sasi Direction Titled Sivappu Manjal Pachai