சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நானி.கொரோனா காரணமாக இவர் நடித்த வி மற்றும் டக் ஜெகதீஷ் திரைப்படங்கள் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இதனை தொடர்ந்து Shyam Singha Roy படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் ஷூட்டிங்கை சில மாதங்களுக்கு முன் நிறைவு செய்தார் நானி.அடுத்ததாக நஸ்ரியாவுடன் இணைந்து Ante Sundaraniki என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் நானி.

Rahul Sanrityan இந்த படத்தினை இயக்குகிறார்.இந்த படத்தில் நானி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.சாய் பல்லவி,க்ரிதி ஷெட்டி மற்றும் மடோனா செபாஸ்டின் இந்த படத்தின் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்துள்ளார்.நிஹாரிகா என்டேர்டைன்மெண்ட்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.

இந்த படம் டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் முதல் பாடல் மற்றும் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் இரண்டாவது பாடல் வரும் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது,இதனை முன்னிட்டு இதன் ப்ரோமோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்