தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ஸ்ருதிஹாசன்.ஹிந்தியில் லக் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.7ஆம் அறிவு,3,புலி,வேதாளம் என்று முக்கிய ஹீரோக்களுடன் நடித்து ஹிட் நாயகியாக திகழ்ந்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

அடுத்ததாக விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஹிந்தியிலும் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மக்கள் அதிகமாக OTT போன்ற ஆன்லைன் தளங்களில் நிறைய நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.திரையரங்குகள் இல்லாததால் சிறிய படங்களை OTTயில் வெளியிட தமிழ் சினிமாவும் தயாராகி வந்தது.

OTT-யில் படங்கள் வெளியிடுவதை திரையரங்க உரிமையாளர்களும்,விநியோகஸ்தர்களும்,திரை பிரபலங்கள் சிலரும் எதிர்த்து வந்தனர்.திரையரங்குகள் இல்லாததால் OTTயில் படங்களை வெளியிட சில தயாரிப்பாளர்கள் ஆதரித்து வந்தனர்.தமிழில் சில படங்கள் நேரடியாக வெளியானதை தொடர்ந்து ஸ்ருதிஹாசனின் ஹிந்தி படமான யாரா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இன்றுடன் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கி 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.இந்த 11 ஆண்டுகளில் தமிழ்,தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.ஹிந்தியிலும் இவர் நடித்த படங்கள் ஹிட் அடித்தன.இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.நடிப்பது மட்டுமல்லாமல் இசை,பாடகர் என்று பல பரிமாணங்கள் பெற்றுள்ளார் ஸ்ருதிஹாசன்.

11 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து ஸ்ருதிஹாசன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில் தனக்கு உறுதுணையாக இருந்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்துள்ள அவர் மேலும் இந்த பயணம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.இவ்வளவு நாளாக தனக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நன்றி என்று தெரிவித்தார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்