கொரோனா சூழலிலும் நெருக்கம் காட்டும் தம்பதிகளால் இந்தியாவில் பாலியல் உபகரணங்கள் பயன்படுத்துவோர் விகிதம் 65 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகமே கொரோனா பீதியால் வீட்டிற்குள் முடங்கி உள்ளது. இதனால் கணவன் - மனைவி அதிக நேரம் ஒரே இடத்தில், இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன் - மனைவி இருவருமே உடல் மொழியின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, சிலர் செக்ஸ் பொம்மை மற்றும் செக்ஸ் சாதனங்களை வாங்கி சுய இன்பத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இன்னும் சிலர், தங்களது தாம்பத்திய இன்பம் இன்னும் சிறப்பாக அமையும் வகையில், இந்த செக்ஸ் கருவிகளை வாங்கி பயன்படுத்தி, இன்னும் உற்சாகமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, செக்ஸ் கருவிகளின் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்குப் படு ஜோராக விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக, அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக அமெரிக்கர்கள் இத்தாலியர்கள், கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் தான், பாலியல் சாதனங்களை அதிக அளவில் வாங்கி பயன்படுத்துகிறார்கள் என்று கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் ஆய்வுகள் வெளியானது. ஆனால், தற்போது, இந்தியாவில் பாலியல் உபகரணங்கள் பயன்படுத்துவோர் விகிதம் 65 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து செக்ஸ் பொம்மை மற்றும் உபகரணங்களை ஆன்லைனில் விற்கும் தட்ஸ்பர்சனல் டாட் காம் நிறுவனம் சார்பில் சமீபத்தில் ஒரு சர்வே நடத்தப்பட்டது. இதில், ஊரடங்கிற்குப் பிறகு கடந்த சில மாதங்களில் மட்டும் செக்ஸ் பொம்மை, உபகரணங்கள் விற்பனை இந்தியாவில் 65 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

அதிலும் குறிப்பாக, மாநிலங்களை வரிசைப்படுத்திப் பார்க்கையில், முதல் இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் அதிக செக்ஸ் பொம்மை மற்றும் உபகரணங்களை வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.  மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக கர்நாடகா மாநிலம் 2 ஆம் இடம் பெற்றுள்ளது.

முக்கியமாக, செக்ஸ் பொம்மை மற்றும் உபகரணங்களை வாங்குவோர் எண்ணிக்கையில் நம்ம தமிழ்நாடு 3 வது இடம் பிடித்துள்ளதாக ஆச்சரியமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதேபோல், முக்கிய நகரங்களைப் பொறுத்தவரை மும்பை நகரம் இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. பெங்களூரு மற்றும் டெல்லி ஆகியவை 2 வது  மற்றும் 3 வது இடங்கள் பிடித்துள்ளன.  

மேலும், பாலின அடிப்படையில் பாலியல் உபகரணங்களை ஆர்டர் செய்வோர் யார் என்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் அதிகமான ஆண்கள் ஆர்டர் செய்து பெற்றுக்கொண்டது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், விஜயவாடா, ஜாம்ஷெட்பூர், பெல்காம், வதோதரா ஆகிய நகரங்களில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமான அளவில் பாலியல் பொம்மை மற்றும் அது சார்ந்த செக்ஸ் உபகரணங்களை வாங்கி உள்ளனர் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு தொடங்கியது முதலே அனைத்து மாநிலங்களிலும் காண்டம் உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் விற்பனை படு ஜோரா சூடு பிடித்தது. முககவசத்திற்கு இணையாகக் காண்டம் விற்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் வெளிநாடுகளுக்கு இணையாக இந்தியாவிலும் பாலியல் உபகரணங்கள் பயன்படுத்துவோர் விகிதம் 65 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆய்வு வெளியாகி உள்ளது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.