ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தில் விக்ரமுடன் அக்‌ஷரா ஹாசன் மற்றும் நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்குகிறார். 

Shruthi Croons A Song Number For Rajesh M Selvas Kadaraam Kondaan Shruthi Croons A Song Number For Rajesh M Selvas Kadaraam Kondaan

கடாரம் கொண்டான் படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன்ஸ் பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டதாம். CG எனப்படும் கிராபிக்ஸ் பணிகள் மட்டும் போய்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் மே மாத இறுதியில் படம் வெளிவரக்கூடும் என்றும் தெரியவந்தது.

Shruthi Croons A Song Number For Rajesh M Selvas Kadaraam Kondaan

தற்போது ஜிப்ரான் இசையில் ஸ்ருதி ஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளாராம். நடிப்பு, நடனம், மாடலிங், நிகழ்ச்சி தொகுப்பு, இசையமைப்பு, பாடல் என பன்முகத்திறமை கொண்ட ஸ்ருதிஹாசனின் திரை பயணம் மேலும் ஜொலிக்க கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.