கடைக்குட்டி சிங்கம் எனும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். தற்போது ரெட்டை ரோஜா சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் அவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். 

ShivaniNarayanan

நாடு முழுவதும் ஊடரங்கு கட்டுப்பாட்டில் இருப்பதால், பலர் தனது வீட்டில் தனியாக இருந்து என்ன செய்வதென்று அறியாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு அசத்தலான டான்ஸ் ஆடியுள்ளார் ஷிவானி. தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோவை அதிகமானோர் பார்த்து ரசித்து வருகின்றனர். 

MasterVaathiComing

விரைவில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் ஷிவானியை காணலாம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் அவரது ரசிகர்கள். பல பிரபலங்கள் இந்நேரத்தில் இதுப்போன்ற வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Vaathi Coming 🏠❤️ .. 1/21

A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) on