"என்ன மாதிரி MYSTERYனு யாருக்குமே தெரியாது!"- சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தில் தனது கேரக்டர் பற்றி பேசிய வசந்த் ரவி! சுவாரசியமான வீடியோ

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தில் தனது கேரக்டர் பற்றி பேசிய வசந்த் ரவி,vasanth ravi opens about his character in jailer movie | Galatta

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. அண்ணாத்த படத்தை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியிருக்கிறார். அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் பக்கா மாஸ் எண்டர்டெய்னிங் படமாக ஜெயிலர் திரைப்படம் தற்போது வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த நடிகர் வசந்த் ரவி தனது கதாபாத்திரம் குறித்து பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசும் போது, கொஞ்சம் பாலிஸ்டா நடிக்க வேண்டும் என்ற இந்த சேலஞ்சை எப்படி ஏற்றுக்கொண்டு செய்தீர்கள்? எனக் கேட்டபோது,

"இதுக்கு முன்னாடி நான் நடித்த மூன்று படங்கள் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அந்த மூன்று படங்களை பார்த்துவிட்டு இந்த படம் நீங்க பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு தெரியும் டயலாக் டெலிவரி பாடி லாங்குவேஜ் இது எல்லாமே நான் உழைத்து வேறு ஒன்று செய்ய வேண்டும் ஏன் என்றால் நான் போலீஸ் கேரக்டர் பண்ணியதே இல்லை. ஒரு அசிஸ்டன்ட் கமிஷனரா வரும் போது அதுக்கான பாடி லாங்குவேஜ் வேண்டும். என்னுடைய எல்லா படத்திலுமே எனக்கு தாடி இருந்தது, ஒன்று கம்மியாக இருந்திருக்கும்இல்லை என்றால் கொஞ்சம் அதிகமா இருந்திருக்கும். தாடி அந்த கேரக்டருக்கு தேவைப்பட்டதால் வெச்சிருந்தோம். ஆனால் இந்த படத்துல கிளீன் ஷேவ் இந்த போலீஸ் லுக் எல்லாம் பார்க்கும்போது  முதல் முறை புதிதாக நீங்கள் ஒன்றை முயற்சி செய்யும்போது, அதுக்கான சின்ன ஹோம் ஒர்க் நான் பர்சனலா எனக்குள் பண்ண வேண்டி இருந்தது. அந்த லுக்கில் டயலாக் டெலிவரி நெல்சன் சாருக்கு ஒரு பேட்டர்ன் இருக்கிறது. அந்தப் பேட்டர்னில் கொஞ்சம் பிடிச்சு என்னோட ஸ்டைலில் நான் செய்தேன். மேலும் நிறைய விஷயங்கள் கண்களிலேயே பண்ண வேண்டி இருந்தது. கண்கள் மட்டுமே நடிக்கும், வேற எந்த எக்ஸ்பிரஷனும் இல்ல உங்களுக்கு பார்க்கும்போது கண்ணை மட்டும் நிறைய நீங்கள் எக்ஸ்பிரஸ் பண்ணாத மாதிரி இருக்கும் அந்தக் கண்களில் நிறைய விஷயங்கள் இருக்கும். ஒரு லவ் இருக்கும் ஒரு பயம் இருக்கும் அப்பாவை பார்த்த உடனே ஒரு தைரியம் இருக்கும். முன்னால் போலீஸ் என இருந்தாலும் அவன் என்ன என்பதை தாண்டி ஒரு புதிர் இருக்கும் அந்த கேரக்டரில்… அது என்ன மாதிரி புதிர் என்று யாருக்குமே தெரியாது… ஒனை நடிகராக இந்த மாதிரி ஒரு படத்துல இப்படி ஒரு ரோல் வந்துட்டு போறது வேறு ஆனால் அந்த கேரக்டரை சுத்தி அந்த கதை நடக்கிறது இருக்குல்ல அது ரொம்ப RARE-ஆக அமையும். அதை தவறவிடக்கூடாது." என பதில் அளித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகர் வசந்த் ரவியின் அந்த முழு பேட்டி இதோ…