"தனுஷுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா!"- பிரம்மாண்டமான Pan-India படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ இதோ!

தனுஷின் D51 படத்தில் இணைந்த ராஷ்மிகா மந்தனா,rashmika mandanna joins with dhanush in d51 movie | Galatta

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்த பிரம்மாண்டமான பேன் இந்தியா படமாக உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாக தான் நாயகியாக நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக தெலுங்கு மற்றும் தமிழன இரு மொழிகளிலும் வெளிவந்த வார்த்தை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது. முன்னதாக தனது திரை பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிரட்டலான அதிரடி ஆக்சன் திரைப்படமாக தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. ராக்கி மற்றும் சாணிக் காயிதம் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் இந்த கேப்டன் முதல் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இதனை அடுத்து தனுஷ் நடிக்கும் அடுத்தடுத்த ஒவ்வொரு திரைப்படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் முதல் ஹிந்தி படமாக வெளிவந்த ராஞ்ஜனா (தமிழில் அம்பிகாபதி) மற்றும் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த அத்ராங்கி ரே (தமிழில் கலாட்டா கல்யாணம்) ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தனுஷ் - ஆனந்த்.எல்.ராய் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக தேரே இஸ்க் மெய்ன் எனும் புதிய ஹிந்தி படத்தில் இணைந்திருக்கிறது. அடுத்ததாக தனது திரை பயணத்தில் 50-வது திரைப்படமாக உருவாகும் புதிய திரைப்படத்தை தற்போது நடிகர் தனுஷ் தொடங்கி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் இந்த புதிய திரைப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் மீண்டும் கைகோர்க்கும் நடிகர் தனுஷ் பிரம்மாண்டமான ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறார்.

இந்த வரிசையில் வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மற்றொரு தெலுங்கு இயக்குனரான தேசிய விருது பெற்ற சேகர் கமுல்லா இயக்கத்தில் தனது 51-வது திரைப்படமாக உருவாகும் D51 படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP நிறுவனம் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் Pvt Ltd ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த D51 திரைப்படத்தின் பட பூஜை ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், அடுத்த கட்ட அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இந்த நிலையில் PAN INDIA படமாக உருவாகும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக பட குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  தமிழில் கார்த்தியின் சுல்தான் மற்றும் தளபதி விஜயின் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து முதல் முறையாக தனுஷ் நடிக்கும் D51 படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்திருக்கிறார். இதனை அறிவிக்கும் வகையில் ரஷ்மிகா மந்தனா பேசும் ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இதோ…
 

Beginning of a new journey.💃🏻❤️#D51

A @sekharkammula film 🎥@dhanushkraja @AsianSuniel @puskurrammohan #AmigosCreations @SVCLLP pic.twitter.com/dQFghtqd6R

— Rashmika Mandanna (@iamRashmika) August 14, 2023