"எக்கச்சக்க ஆக்ஷன்... ரெடி ஸ்டெடி போ..!"- அட்லீயின் ஜவான் பட பக்கா மாஸ் அப்டேட் கொடுத்த ஷாரூக் கான்! விவரம் உள்ளே

அட்லீயின் ஜவான் பட மாஸ் அப்டேட் கொடுத்த ஷாரூக் கான்,shah rukh khan answered fans questions about jawaan in twitter | Galatta

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராகவும் உலக அளவில் பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் நடிகர் ஷாரூக் கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த பதான் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த பதான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஷாரூக் கான் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில் முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், PK உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகும் டங்கி திரைப்படத்தில் தற்போது ஷாரூக் கான் நடித்து வருகிறார். மேலும் சல்மான் கான் நடிப்பில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் டைகர் 3 படத்தில் முக்கியமான கௌரவ வேடத்தில் ஷாரூக் கான் நடிக்க இருக்கிறார்.

இதனிடையே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அட்லீ முதல் முறை பாலிவுட்டில் இயக்குனராக களமிறங்கும் ஜவான் திரைப்படத்தில் ஷாரூக் கான் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக நயன்தாரா களமிறங்க, மிரட்டலான வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஜவான் படத்தில் தளபதி விஜய் கௌரவ வேடத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது. ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ஜவான் திரைப்படத்திற்கு GK.விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். இயக்குனர் அட்லி மற்றும் நயன்தாராவிற்கு மட்டுமல்லாது ஒளிப்பதிவாளர் விஷ்ணு, படத்தொகுப்பாளர் ரூபன் மற்றும் இசையமைப்பாளர் ராக் ஸ்டார் அனிருத்துக்கும் ஜவான் திரைப்படம் தான் முதல் ஹிந்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என PAN INDIA படமாக ஜவான் படம் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜவான் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் #AskSRK என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த ஷாரூக் கானிடம், “உங்களுக்கு உடல் ரீதியாக எந்த திரைப்படம் மிகவும் சவாலானதாக இருந்தது டங்கி படமா? அல்லது ஜவான் படமா?” எனக் கேட்டபோது, “கட்டாயமாக ஜவான் தான் எக்கச்சக்கமான ஆக்சன் இருக்கிறது” என பதில் அளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம், “ஜவான் திரைப்படம் தயாராகிவிட்டதா?” எனக் கேட்ட ரசிகருக்கு பதிலளித்த ஷாரூக் கான், “முற்றிலுமாக தயார் ரெடி ஸ்டெடி போ!” என பதிலளித்துள்ளார். மேலும் அவரிடம், “இந்த மாலையில் உங்களுடைய அடுத்த திட்டங்கள் என்ன?” என கேட்டபோது, “அட்லியுடன் இணைந்து ஜவான் படம் பார்க்கலாமா என யோசிக்கிறேன்” என்று பதில் அளித்துள்ளார். ரசிகர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அட்டகாசமான அப்டேட்களை பகிர்ந்த ஷாருக்கானின் பதில்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகர் ஷாரூக் கானின் அந்த பதிவுகள் இதோ…
 

Was thinking will watch Jawaan with Atlee…. https://t.co/cgG7vXeFpo

— Shah Rukh Khan (@iamsrk) June 12, 2023

Jawaan for sure lots of action https://t.co/Q3so4dgs2E

— Shah Rukh Khan (@iamsrk) June 12, 2023

Absolutely Ready Steady Po!! https://t.co/6ZkQPq0qQo

— Shah Rukh Khan (@iamsrk) June 12, 2023

இசையமைப்பாளராக களமிறங்கும் ARரஹ்மானின் மகள் கதீஜா... முதல் படமே வேற லெவல்! இயக்குனர் யார் தெரியுமா? அட்டகாசமான அறிவிப்பு இதோ
சினிமா

இசையமைப்பாளராக களமிறங்கும் ARரஹ்மானின் மகள் கதீஜா... முதல் படமே வேற லெவல்! இயக்குனர் யார் தெரியுமா? அட்டகாசமான அறிவிப்பு இதோ

சூப்பர் ஹீரோவாக அசத்தும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன்... அதிரடி சண்டைகாட்சியின் ACTION PACKED மேக்கிங் வீடியோ இதோ!
சினிமா

சூப்பர் ஹீரோவாக அசத்தும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன்... அதிரடி சண்டைகாட்சியின் ACTION PACKED மேக்கிங் வீடியோ இதோ!

தமிழ்நாடு முழுவதும் நடப்பாண்டில் 1.1கோடி மரக்கன்றுகள் நட இலக்கு... ஈஷாவின் காவேரி குக்கரல் இயக்கத்தின் மெகா திட்டம்!
சினிமா

தமிழ்நாடு முழுவதும் நடப்பாண்டில் 1.1கோடி மரக்கன்றுகள் நட இலக்கு... ஈஷாவின் காவேரி குக்கரல் இயக்கத்தின் மெகா திட்டம்!