சிவகார்த்திகேயன் - அதிதி ஷங்கர் இருவருக்கும் பல்ப் கொடுத்த படக்குழு... மாவீரன் 2வது பாடலை அறிவிக்கும் செம்ம ரகளையான வீடியோ இதோ!

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட 2வது பாடலை அறிவிக்கும் வீடியோ,Sivakarthikeyan in maaveeran movie second single release announcement | Galatta

ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாநாயகர்களில் ஒருவராக திகழும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த வெளிவர இருக்கும் மாவீரன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த மாஸான அறிவிப்பு கலக்கலான வீடியோவுடன் வெளியானது.   சின்னத்திரையின் வழியாக வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து தற்போது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரையும் கவரும் நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. இருப்பினும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவரும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் முதல் முறையாக இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் R.ரவிசங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கும் SK21 திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, SK21 திரைப்படம் பூஜை உடன் தொடங்கப்பட்டது. 

இதனிடையே யோகி பாபு நடிப்பில் வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து ஆஸ்காருக்கான போட்டி வரை முன்னேறிய, மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் மாவீரன். சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் முழு நீள வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் மாவீரன் திரைப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகான (OTT) டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட வரும் ஜூலை 14ம் தேதி மாவீரன் படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில் மாவீரன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது. “வண்ணாரப்பேட்டையில” எனும் இந்த பாடல் நாளை மறுநாள் ஜூன் 14ஆம் தேதி வெளிவர உள்ளது. பாடலாசிரியர் யுகபாரதி அவர்கள் எழுதியிருக்கும் இந்த பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் இணைந்து பாடி இருக்கின்றனர். இதனை அறிவிக்கும் வகையில் கலகலப்பான ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். பாடகர் சிட் ஸ்ரீராம் உடன் இணைந்து பாட வாருங்கள் என அதிதி ஷங்கரையும், பாடகி ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து பாட வாருங்கள் என சிவகார்த்திகேயனையும் அழைத்து இருவரையும் சேர்த்து பாடவைப்பது போன்ற கலகலப்பான வீடியோவாக இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
 

#Vannarapettayila from 14.06.2023! #MaaveeranSecondSingle#Maaveeran #VeerameJeyam pic.twitter.com/k2HrsT4kZu

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 12, 2023

சூப்பர் ஹீரோவாக அசத்தும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன்... அதிரடி சண்டைகாட்சியின் ACTION PACKED மேக்கிங் வீடியோ இதோ!
சினிமா

சூப்பர் ஹீரோவாக அசத்தும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன்... அதிரடி சண்டைகாட்சியின் ACTION PACKED மேக்கிங் வீடியோ இதோ!

தமிழ்நாடு முழுவதும் நடப்பாண்டில் 1.1கோடி மரக்கன்றுகள் நட இலக்கு... ஈஷாவின் காவேரி குக்கரல் இயக்கத்தின் மெகா திட்டம்!
சினிமா

தமிழ்நாடு முழுவதும் நடப்பாண்டில் 1.1கோடி மரக்கன்றுகள் நட இலக்கு... ஈஷாவின் காவேரி குக்கரல் இயக்கத்தின் மெகா திட்டம்!

யோகி பாபு - முனீஸ்காந்தின் கலக்கல் காமெடி... சித்தார்த்தின் டக்கர் பட கலகலப்பான புது ஸ்னீக் பீக் வீடியோ இதோ!
சினிமா

யோகி பாபு - முனீஸ்காந்தின் கலக்கல் காமெடி... சித்தார்த்தின் டக்கர் பட கலகலப்பான புது ஸ்னீக் பீக் வீடியோ இதோ!