விஜய் டிவியில் ஒளிபரப்பான 7சி தொடரின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் ஸ்ரீத்து கிருஷ்ணன்.இந்த தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ஸ்ரீத்து கிருஷ்ணன்.நடனத்திலும் மிகவும் ஆர்வமுடைய இவர் சில நடன போட்டிகளிலும் நடித்து அசத்தியிருந்தார்.

அடுத்ததாக ஜீ தமிழின் மெல்ல திறந்தது கதவு,விஜய் டிவியின் கல்யாணமாம் கல்யாணம் தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் ஸ்ரீத்து கிருஷ்ணன்.அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஆயுத எழுத்து தொடரில் ஹீரோயினாக நடித்து அசத்தினார்.இந்த தொடரில் இருந்து சில காரணங்களால் விலகினார் ஸ்ரீத்து.

இவற்றை அடுத்து தமிழில் சீரியல்களில் நடிக்காமல் இருந்த ஸ்ரீத்து, முரட்டு சிங்கிள்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் வந்து அசத்தியுள்ளார்.மேலும் 10 எண்றதுக்குள்ள,ரங்கூன் உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் ஸ்ரீத்து கிருஷ்ணன்.மலையாளத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார் ஸ்ரீத்து கிருஷ்ணன்.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஸ்ரீத்து கிருஷ்ணன் தனது புகைப்படங்கள் நடன வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார் ஸ்ரீத்து கிருஷ்ணன்.தற்போது தனது ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.