மாடல் ஆக தனது பயணத்தை தொடங்கி விளம்பர படங்கள் குறும்படங்கள் உள்ளிட்டவற்றில் நடித்து இப்போது சீரியல் நடிகையாக அசத்தி வருபவர் பவ்யாஸ்ரீ.ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர் திருமதி ஹிட்லர்.அமித் பார்கவ் மற்றும் கீர்த்தனா முன்னணி வேடங்களில் நடித்தனர்.

350 எபிசோடுகளை கடந்த இந்த தொடரில் சித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் பவ்யாஸ்ரீ.இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வந்தது.இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.இந்த தொடர் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து ஜீ தமிழின் பெரிய ஹிட் தொடர்களில் ஒன்றான செம்பருத்தி தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அசத்தினார் பவ்யா.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் பவ்யா தனது புகைப்படம் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

இவர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சீரியலில் நடிக்கிறார்.தற்போது கலைஞர் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பை தொடங்கிய குக்கிங் கில்லாடிஸ் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இதற்கு முன்னர் இந்த தொடரை பிரபல சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது