தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான வைபவ் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து கோவா, ஈசன், மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்தார்.

தொடர்ந்து தமிழ் திரை உலகில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் வைபவ் கடைசியாக நடித்த மேயாத மான், RK நகர், மலேசியா டு அம்னீசியா ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும் வைபவ் நடிப்பில் ஆலம்பனா மற்றும் காட்டேரி உள்ளிட்ட திரைப்படங்கள் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகின்றனர்.

அந்தவகையில் அடுத்ததாக வைபவ் நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் பபூன். இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பபூன் திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் PASSION ஸ்டுடியோஸ் இணைந்து வழங்க தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

வைபவ் உடன் இணைந்து கதாநாயகியாக நடிகை அனகா நடிக்க, ஜோடி ஜார்ஜ், ஆடுகளம் நரேன், மூனார் ரமேஷ், தமிழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் பபூன் படத்தின் டீசர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் பலரது கவனங்களையும் ஈர்த்துள்ள பபூன் படத்தின் டீசர் இதோ…