பெங்களூரில் பிறந்து தற்போது தமிழ்,தெலுங்கு,கன்னட உள்ளிட்ட மொழிகளில் சின்னத்திரையில் அசத்தி வருபவர் ஆஷிகா கோபால் படுகோன்.நிஹாரிகா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

இதனை அடுத்து த்ரிவேணி சங்கமம் தொடரில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார்.அடுத்தாக ராஜா ராணி தொடரின் ரீமேக் ஆன Kathalo Rajakumari தொடரில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் ஆஷிகா.

அடுத்ததாக சன் டிவியில் ஒளிபரப்பான தமிழ்செல்வி தொடரில் ஹீரோயினாக நடித்து தமிழ் சின்னத்திரையிலும் தனது என்ட்ரியை கொடுத்தார் ஆஷிகா.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

இவருக்கு சேட்டன் ஷெட்டி என்பவருடன் அக்டோபர் 2021-ல் கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.கணவருடன் மாலத்தீவு சென்றுள்ள ஆஷிகா ட்ரிப்பில் இருந்து தனது பிகினி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது

serial actress ashika padukone trending bikini photo from maldives