தமிழ் சினிமாவின் ஜீனியஸ் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் NGK. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் நடிகர் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி, ஜகபதி பாபு போன்ற நடிகர்கள் உள்ளனர். 

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் டீஸர் இன்னும் 5 நாட்களில் வெளியாகவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் சூர்யா ரசிகர்கள்.

தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், NGK படத்தின் டீஸர் மாலை 6 மணியளவில் வெளியாகவுள்ளதாம்.

Selvaraghavans NGK Teaser To Strike On Valentines Day Sharp By 6 PM