மக்களை மகிழ்விப்பதில் என்றும் குறை வைத்ததில்லை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் வெளியவிருக்கும் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. முதியவர் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு இப்படம் 25-வது படமாகும்.   

இப்படத்தில் மக்கள் செல்வனுடன் அர்ச்சனா, பகவதி பெருமாள், ராஜ்குமார், மௌலி, மகேந்திரன், பார்வதி நாயர், ரம்யா நம்பீசன், காயத்ரி போன்ற நட்சத்திரங்கள் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா மேனன் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.   

தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி அனைவரையும் ஈர்த்து வருகிறது. டிசம்பர் 20-ம் தேதி வெளிவர காத்திருக்கும் இப்படம் விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.