மக்களை மகிழ்விப்பதில் என்றும் குறை வைத்ததில்லை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் வெளியவிருக்கும் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. முதியவர் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு இப்படம் 25-வது படமாகும். 

இப்படத்தில் அர்ச்சனா, பகவதி பெருமாள், ராஜ்குமார், மௌலி, மகேந்திரன், பார்வதி நாயர், ரம்யா நம்பீசன், காயத்ரி போன்ற நட்சத்திரங்களும் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா மேனன் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாடலான அவன் பாடலின் பாடல் வரிகள் கொண்ட வீடியோ வெளியானது. மதன் கார்க்கி எழுதிய இப்பாடல் வரிகள் அற்புதமாக அமைந்துள்ளது. சிறப்பாக பாடியிருக்கிறார் ஹரிஷ் ராமகிருஷ்ணா.