வனமகன் ,கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து தமிழ் இளைஞர்களின் நெஞ்சங்களை கொள்ளை அடித்தவர் சாயிஷா.தற்போது இவர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.சில நாட்களுக்கு முன் ஆர்யாவுடனான தனது திருமணம் குறித்து அறிவித்திருந்தார்.

Sayyeshaa Saigal To Make Her Kannada Debut in Yuva Rathnaa Opposite Punith Rajkumar Bankrolled By KGF Producers

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என மூன்று மொழிகளில் நடித்திருந்த சாயிஷா தற்போது கன்னட சினிமாவிலும் அறிமுகமாக உள்ளார்.புனித் ராஜ்குமார் நடிக்கும் இந்த படத்தை சந்தோஷ் ஆனந்தராஜ் இயக்குகிறார்.யுவரத்னா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மூலம் கன்னட திரைப்பட உலகிலும் தனது தடத்தை பதிக்க உள்ளார்.

Sayyeshaa Saigal To Make Her Kannada Debut in Yuva Rathnaa Opposite Punith Rajkumar Bankrolled By KGF Producers

KGF படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.திருமண அறிவிப்புக்கு பிறகு சாயிஷா ஒப்பந்தமாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.