தமிழ் திரையுலகில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமானவர் நடிகர் சதீஷ். தனது எதார்த்தமான காமெடியால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 திரைப்படத்தில் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். 

Sathish Shares Veena Instrument Playing Video

கொரோனா காரணமாக வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள திரை பிரபலங்கள் உடற்பயிற்சி, வீட்டு வேலைகள், நடனம், பாடல், சமையல் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். ஊரடங்கால் படப்பிடிப்பு எங்கேயும் செல்லாமல் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ளனர். ஒரு சில பிரபலங்கள் லைவ்வில் தோன்றி ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். 

Sathish Shares Veena Instrument Playing Video

இந்நிலையில் நடிகர் சதீஷ் வீணை வாசிப்பது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஜீன்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணோடு காண்பதெல்லாம் பாடலுக்கு வாசிப்பது போல் தெரிந்தது. கடைசியில் பாடல் ஓட, வாசிப்பது போல் நடித்துள்ளார் சதீஷ். சதீஷின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.