ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள திரைப்படம் சைலன்ஸ். இப்படத்தில் அனுஷ்காவுடன் நடிகர் மாதவன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். திகில் கலந்த கிரைம் த்ரில்லரான இப்படத்தில் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பா ராஜு, மைக்கேல் மேட்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Anushkas Silence Movie Gets UA Censor Certificate

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது இப்படம். படத்தின் ட்ரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தில் தான் அனுஷ்கா மற்றும் மாதவன் இணைந்து நடித்துள்ளனர். 

Anushkas Silence Movie Gets UA Censor Certificate

இந்த படம் ஓ.டி.டி எனப்படும் ஆன்லைன் தளத்தில் வெளியாகவுள்ளது என்றெல்லாம் வதந்திகள் கிளம்பியது. படத்தை தியேட்டரில் தான் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று தயாரிப்பாளர் தெளிவு படுத்தினார். தற்போது படத்திற்கு U/A சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.