பரியேறும் பெருமாள் எனும் அற்புதமான படைப்பின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மாரி செல்வராஜ். கலைப்புலி S தாணு தயாரிப்பில் நடிகர் தனுஷ் வைத்து கர்ணன் படத்தை இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

Natty Praises Director Mari Selvaraj For Karnan Natty Praises Director Mari Selvaraj For Karnan

படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்க நடிகர் லால், கௌரி கிஷன், லக்ஷ்மி பிரியா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடந்து முடிந்தது. சமீபத்தில் படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றது. 

Natty Praises Director Mari Selvaraj For Karnan

இந்நிலையில் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த நட்டி நட்ராஜ், இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், மாரி செல்வராஜ்.. ஆக சிறந்த இயக்குனர். படம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க என்று பதிவு செய்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ், உங்கள் ப்ரியத்திற்கும் நம்பிக்கைக்கும் மிக்க நன்றி சார் என்று கூறியுள்ளார். இயக்குனரின் இந்த பதிவின் கீழ் கர்ணன் அப்டேட் ஏதாவது உண்டா ? என்று அன்பு தொல்லை செய்து வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள்.