சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் கதைக் கரு தொடர்பாக சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டது. 

Sarkar Movie Ticket Rate To Be Sell In A Right Rate Official Announcement By HighCourt

இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒருவர் மனு தாக்கல் செய்தார். அதில் மதுரையில் சர்கார் படத்துக்கு ரூபாய் 500 முதல் 1,000 வரை ஆன்லைனில் வசூலித்து விதி மீறலில் ஈடுபடுகிறார்கள். இதனால் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பும் நடைபெறுகிறது. எனவே, மதுரை மாவட்டத்தில் சர்கார் படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் அரசாணைப்படி கட்டணம் வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

நேற்று இந்த மனு நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் சிறப்பு குழு ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தனர். கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வழக்கை முடித்துவைத்தனர்.

சர்க்கார் படம் திரையரங்குகளில் வெளிவர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மிகுந்த ஆவலுடன் உள்ளனர் தளபதி ரசிகர்கள்.

Sarkar Movie Ticket Rate To Be Sell In A Right Rate Official Announcement By HighCourt