தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நாயகர்களாக விளங்கும் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார் இருவரின் திரைப்படங்களும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரே நாளில் ரிலீஸாகின்றன. அடுத்த ஆண்டு(2023) பொங்கல் வெளியிடாக ஜனவரி 12ஆம் தேதி தளபதி விஜயின் வாரிசு மற்றும் அஜித்குமாரின் துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீஸாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு காத்திருக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வாரிசு திரைப்படத்தை வெளியிட ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் துணிவு திரைப்படத்தை வெளியிடுகிறது. முன்னதாக தமிழகத்தில் வாரிசு திரைப்படத்தை விட துணிவு திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்திக்க உள்ளதாக சமீபத்தில் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தில்ராஜு அவர்கள் தெரிவித்திருந்தார்.

மேலும் தமிழகத்தில் தளபதி விஜய் தான் நம்பர் 1 நடிகர் அவருக்கு தான் அதிகத் திரையரங்குகள் வழங்க வேண்டும் எனவும் தயாரிப்பாளர்கள் தில்ராஜு பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இது குறித்து தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்செயன் அவர்கள் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பதிலளித்துள்ளார்.

அந்தவகையில் பேசும்போது, “இதே வார்த்தையை அவர் ஆந்திராவில் சொல்லி விடுவாரா..? இதையே ஆந்திராவில் மகேஷ் பாபுவின் மார்க்கெட் பவன் கல்யாணை விட பெரியதாக இருக்கிறது. அப்படியெல்லாம் சொல்லி அவர் தப்பித்து விட முடியுமா.? அவர் தெலுங்கில் நிறைய படங்கள் எடுக்கிறார். இப்போது அதே பொங்கல் அன்று இரண்டு தெலுங்கு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. ஒன்று சிரஞ்சீவி சார் படம் இன்னொன்று பாலய்யா அவர்களின் படம். அதை சொல்வாரா சிரஞ்சீவிக்கு தான் மார்க்கெட் அதிகம் என்று அதனால் பால்லயாவை விட சிரஞ்சீவிக்கு அதிக திரையரங்குகள் கொடுக்க வேண்டும் என்று சொல்வாரா..? இதெல்லாம் தேவையில்லாத ஒரு Controversy யாரு நம்பர் 1 நம்பர் 2 என்பது ஆடியன்ஸ்க்கு தெரியும் மக்களுக்கும் தெரியும். யாருக்கு பெரிய மார்க்கெட் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். எப்போதுமே மார்க்கெட்டை படங்கள் தான் தீர்மானிக்கின்றன. ஒட்டுமொத்த வர்த்தகம் குறித்து நாம் பேசிக் கொண்டே இருக்கலாம். அது எல்லோருக்கும் தெரிந்ததுதான் ஒட்டுமொத்த வர்த்தகம் என்று பார்க்கும்போது எப்போதுமே ரஜினி சார் தான் அவர் ஒரு சூப்பர் ஸ்டார் அவர் எப்போதுமே லெஜண்ட் அவரை தனியாக வைத்து விடுங்கள். கமல் சார் ரஜினி சார் இருவரும் ஐகானிக் அவர்களை இந்த நம்பர் லிஸ்டில் வைக்கவே கூடாது. அடுத்ததாக இருக்கும் இந்த இளம் நடிகர்களில் பார்க்கும்போது அனைவருக்குமே தெரியும் தமிழகத்தை பொறுத்தவரை விஜய் மற்றும் அஜித் இருவருக்குமே மிக சமமான பரபரப்பு இருக்கிறது. எனவே நான் பலமுறை சொல்லி இருக்கிறேன் தமிழ்நாடு பொறுத்த வரை இருவருக்கும் சமமாக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும். மற்ற இடங்களில் களம் மாறிக்கொண்டே இருக்கும். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அஜித் அவர்கள் அதிகம் கவனம் செலுத்தவில்லை ஆனால் விஜய் அவர்களுக்கு அங்கே மார்க்கெட் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு தெலுங்கு தயாரிப்பாளரே அவர் படத்தை தயாரிக்கும் அளவிற்கு அங்கே மார்க்கெட் வளர்ந்து இருக்கிறது. எனவே வாரிசு படத்தில் தெலுங்கு மார்க்கெட் இன்னும் பெரிதாக இருக்கிறது. எனவே தெலுங்கு மார்க்கெட்டில் கம்பேர் பண்ணினால் இருவரில் ஒரு வித்தியாசம் இருக்கத்தான் போகிறது. வெளிநாடுகளை பொருத்தவரையில் விஜய் சாருக்கு மிகப்பெரிய ரீச் இருக்கிறது.” என தயாரிப்பாளர் தனஞஜெயன் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் தனஞ்ஜெயனின் அந்த முழு பேட்டி இதோ…