கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மக்கள் அதிகமாக OTT போன்ற ஆன்லைன் தளங்களில் நிறைய நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.திரையரங்குகள் இல்லாததால் சிறிய படங்களை OTTயில் வெளியிட  உள்ளனர்.

Santhanam Server Sundaram To Release in OTT

இதன் முதற்கட்டமாக சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் நேரடியாக OTTயில் வெளியாகும் என்ற தகவல் வெளியானது.இதற்கு திரையரங்க உரிமையாளர்களும்,விநியோகஸ்தர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் சூர்யா,ஜோதிகா படங்களை திரையிடப்போவதில்லை என்றும் போர்க்கொடி தூக்கினர்.

Santhanam Server Sundaram To Release in OTT

பல நாட்களாக ரிலீஸ் தள்ளிப்போய் வரும் சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படம் தற்போது நேரடியாக OTTயில் வெளியாகவுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Santhanam Server Sundaram To Release in OTT