மலையாளம் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான்.இவர் தயாரித்து நடித்த வரனே அவசியமுண்டு என்ற திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் சில நாட்களுக்கு முன் OTT-யில் வெளியானது.

Dulquer Salmaan Apologizes To Tamil Audience

இந்த படத்தை பல ரசிகர்களும் பார்த்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.இந்த படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி பிரபாகரனை கேலி செய்வதுபோல் உள்ளதாக தமிழ் ரசிகர்கள் சிலர் ட்விட்டரில் பதிவிட்டினர்.இது பரவி துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் தெரிவித்தனர்.

Dulquer Salmaan Apologizes To Tamil Audience

இதனை தொடர்ந்து துல்கர் சல்மான் தனது ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார்.அந்த காட்சி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் வைக்கப்பட்டதல்ல ஒரு காமெடி காட்சியை பலரும் தவறாக புரிந்துகொண்டனர் என்று விளக்கமளித்து.இந்த காட்சி யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்தார்.