தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில்
மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Master Director Lokesh kanagaraj Instagram Live

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

Master Director Lokesh kanagaraj Instagram Live

நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவாக வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது ப்ரோமோஷன்,ரிலீஸ் வேலைகள் தான் பாக்கி உள்ளன என்று தெரிவித்தார்.படத்தின் ரிலீஸ் தேதி முடிவான பிறகே ட்ரைலர் வெளியாகும் என்று அவர் தெரிவித்தார்.இது ஒரு தரமான ஆக்ஷன் படமாக இருக்கும் என்று தெரிவித்த அவர் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு நிச்சயமாக அனைவரும் திரையரங்குகளில் பார்த்து மகிழலாம் என்று தெரிவித்தார்.