தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சந்தானம் தற்போது கதாநாயகனாகவும் அடுத்தடுத்து நகைச்சுவை மையப்படுத்திய பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் SANTA15 படத்தில் நடித்துள்ளார்.

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 15வது திரைப்படமான SANTA15 படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சந்தானம் நடிப்பில் விரைவில் ரிலீசாக உள்ள திரைப்படம் ஏஜென்ட் கண்ணாயிரம். முன்னதாக தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஏஜென்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் தயாராகியுள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

இந்த வரிசையில் மேயாதமான் & ஆடை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் குலுகுலு. சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள குலு குலு படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

குலு குலு படத்தில் அதுல்யா சந்த்ரா கதாநாயகியாக நடிக்க, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், லொள்ளுசபா மாறன், லொள்ளுசபா சேஷு, TSR ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குலு குலு திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்த நிலையில் வருகிற ஜூலை 29-ம் தேதி குலுகுலு திரைப்படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தலை கீழாக தான் குதிக்க போகிறோம் 😉. #GuluGulu in THEATERS from this July 29. 🥳💥.

Journey Begins#GuluGulufromJuly29 @iamsanthanam @circleboxE @Music_Santhosh @KVijayKartik@philoedit@jacki_art@Lyricist_Vivek@rajnarayanan_ @SonyMusicSouth @proyuvraaj @Kirubakaran_AKR pic.twitter.com/wqKRw1SJIN

— Rathna kumar (@MrRathna) July 8, 2022