பேய் கூட புது மாதிரியான கேம்.. மீண்டும் கலக்கல் ஹாரர் காமெடியில் சந்தானம்.. – வெளியானது ‘DD ரிட்டர்ன்ஸ்’ பட டிரைலர்..

சந்தானம் நடிப்பில் ஹாரர் காமெடி கதைகளத்தில் உருவான டிடி ரிட்டர்ன்ஸ் பட டிரைலர் இதோ - Santhanam Horror comedy film DD returns Trailer out now | Galatta

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனது அட்டகாசமான காமெடி திறனால் கொடி கட்டி பறந்த நடிகர் சந்தானம். தமிழ் சினிமாவின் பெரும்பாலான நட்சத்திரங்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய சந்தானம் கடந்த 2013 ல் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் தனக்கென தனி நகைச்சுவை கதை கொண்ட திரைப்படங்களை முதன்மை கதாபாத்திரமாக எடுத்து நடிக்க தொடங்கினார். அதனபடி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, A1, டக்கால்டி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி போன்ற திரைப்படங்கள் சந்தானத்தின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது. கடன்ஹா ஆண்டு இவரது நடிப்பில் வெளியான குளுகுளு, எஜன்ட் கண்ணாயிரம் ஆகிய திரைப்படங்கள் பெரிதளவு வெற்றியை இவருக்கு கொடுக்கவில்லை. அதை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் ‘கிக்’ என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது.

இதனிடையே சந்தானம் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘DD ரிட்டர்ன்ஸ்’. இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் கலகலப்பான காமெடி ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ரெட்டின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவட், மசூம் ஷங்கர், பெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், முனீஸ் காந்த், தீனா, விபின், தங்கதுரை, தீபா, சைதை சேது மற்றும் மானசி உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆர்கே என்டர்டைன்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் C.ரமேஷ் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் பிரபல சுயாதீன ஆல்பம் இசையமைப்பாளர்  OFRO இசை அமைத்திருக்கிறார்.

முன்னதாக  DD ரிட்டன்ஸ் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது DD ரிட்டன்ஸ் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹாரர் கேம் போட்டியில் கதாநாயகன் சந்தானம் மற்றும் அவரது நண்பர்கள் பங்கேற்கும் வகையில் வழக்கமான சந்தனாத்தின் கவுண்டர் கலாய்களும், ஹாரர் காமெடிக்களும் நிறைந்துள்ளது. தற்போது படக்குழு வெளியிட்டுள்ள DD ரிட்டர்ன்ஸ் டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது. சந்தானத்தில் காமெடி அதகள திரைப்படமாக உருவாகியுள்ள DD ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வரும் ஜூலை 28ம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் முதல் அனிருத் வரை.. ரசிகர்களின் கேள்விக்கு அசராமல் பதிலளிக்கும் ஷாருக் கான்.. – அட்லியின் ‘ஜவான்’ படம் குறித்து குவியும் அப்டேட்டுகள்..
சினிமா

தளபதி விஜய் முதல் அனிருத் வரை.. ரசிகர்களின் கேள்விக்கு அசராமல் பதிலளிக்கும் ஷாருக் கான்.. – அட்லியின் ‘ஜவான்’ படம் குறித்து குவியும் அப்டேட்டுகள்..

“Script - க்கே நிறைய நேரம் தேவைப்படும்..” தனுஷ் படம் குறித்து மாரி செல்வராஜ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview இதோ..
சினிமா

“Script - க்கே நிறைய நேரம் தேவைப்படும்..” தனுஷ் படம் குறித்து மாரி செல்வராஜ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview இதோ..

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் அரசியலா..? படக்குழுவிற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்..
சினிமா

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் அரசியலா..? படக்குழுவிற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்..