பாடகராக களமிறங்கும் நடிகர் விஷால்.! ‘மார்க் ஆண்டனி’ படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்.. வீடியோ உள்ளே..

மார்க் ஆண்டனியில் பாடகராக களமிறங்கும் நடிகர் விஷால் வீடியோ உள்ளே - Vishal as singer in Mark antony Viral video here | Galatta

ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு படத்திற்கு குடும்பங்கள் கொண்டாடும் விஷயங்களை சேர்த்து பக்கா கமர்ஷியல் திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து இன்று தென்னிந்தியா சினிமாவின் குறிப்பிடப்படும் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இவரது படங்களுக்கே தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘லத்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் விஷால் இயக்குனர் ஹரியுடன் கூட்டனி அமைத்து புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கும் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடிக்கவும் உள்ளார். ஏற்கனவே தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் விஷால் துப்பறிவாளன் 2 படம் மூலம் இயக்குனராகவும் களமிறங்கவுள்ளார்.

இதனிடையே திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பகீரா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தில் கதையின் நாயகனாக விஷால் நடிக்க அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். அதை தொடர்ந்து படத்தில் இயக்குனர் செல்வராகவன், ரித்து வர்மா, தெலுங்கு நடிகர் சுனில், ஒய்ஜி மகேந்திரன், ரெடின் கிங்க்ஸ்லி ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.

மினி ஸ்டுடியோ தயாரிப்பில் வித்யாசமான கதைகளத்தில் Sci Fi திரைப்படமாக உருவாகும் மார்க் ஆண்டனி படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியது. அதன்படி மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் விநாயகர் சதூர்த்தி பண்டிகை நாளில் தமிழ், தெலுங்கு, கன்னடம். இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது. ரிலீஸ்கான இறுதிகட்ட பணியில் தீவிரமாக இருக்கும் மார்க் ஆண்டனி படக்குழு படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் பிரபல திரைகலைஞர் டி ராஜேந்தர் ‘அதிருதா’ என்ற பாடலை ஜிவி பிரகாஷ் இசையில் பாடியுள்ளார். இது குறித்த புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி டிரெண்ட்டாகி வருகிறது.

இந்நிலையில் படத்தின் தெலுங்கு வேர்ஷனில் அதிருதா பாடலை படத்தின் நாயகன் விஷால் பாடியுள்ளார்.  அட்டகாசமான புரோமோவுடன் பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. அறிவிப்பின்படி  வரும் ஜூலை 15 முதல் அதிருதா பாடல் இணையத்தில் வெளியாகவுள்ளது.  மேலும் தெலுங்கில் பாடிய அனுபவம் குறித்து நடிகர் விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில், “மார்க் ஆண்டனி பட உலகில் ஒரு பாடகனாகவும் நுழைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. அற்புதமான அனுபவமாக அது இருந்தது. உண்மையில் பாடகர்கள் ஒரு பாடலை பாடி முடிப்பதற்குள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை இன்று நான் உணர்ந்தேன்.. உண்மையில் பாடகர்கள் ஒரு பாடலை பாடி முடிப்பதற்குள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை இன்று தான் உணர்ந்துள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Well, this is what I was talking about yesterday. Was an ecstatic feeling to sing a song for the telugu version of #MarkAntony

Happy to enter as a singer also in the #WorldOfMarkAntony

Hats off to all you singers, could see how much effort you need to put to sing a song. Hope…

— Vishal (@VishalKOfficial) July 13, 2023

இதையடுத்து நடிகர் விஷால் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஷால் இதற்கு முன்னதாக சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் மதகத ராஜா படத்தில் விஜய் ஆண்டனி இசையில் ‘மை டியர் லவ்வரு’ என்ற பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் அரசியலா..? படக்குழுவிற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்..
சினிமா

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் அரசியலா..? படக்குழுவிற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்..

‘மாவீரன்’ வெற்றியை உறுதி செய்த உதயநிதி ஸ்டாலின்.. – உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..
சினிமா

‘மாவீரன்’ வெற்றியை உறுதி செய்த உதயநிதி ஸ்டாலின்.. – உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..

நானியின் 30வது படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு.. சர்ப்ரைஸ் வீடியோவுடன் வைரலாகும் அப்டேட் உள்ளே.
சினிமா

நானியின் 30வது படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு.. சர்ப்ரைஸ் வீடியோவுடன் வைரலாகும் அப்டேட் உள்ளே.