'பரத்தின் 50வது படம்!'- மீண்டும் இணைந்த பரத் - வாணி போஜனின் "லவ்"... கவனத்தை ஈர்க்கும் விறுவிறுப்பான ட்ரெய்லர் இதோ!

பரத்தின் 50 ஆவது படமான லவ் பட ட்ரெயலர் வெளியீடு,bharath 50th film love movie trailer out now | Galatta

தனது திரைப்பயணத்தில் 50-வது திரைப்படமாக நடிகர் பரத் நடித்திருக்கும் லவ் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகிய நடிகர் பரத், தொடர்ந்து 2004ம் ஆண்டு விஷால் கதாநாயகனாக அறிமுகமான செல்லமே திரைப்படத்தில் வித்தியாசமான நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து நடிகராக பிரபலமடைந்தார். தொடர்ந்து அதே 2004 ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படத்தில் மக்களின் மனதை கவர்ந்த பரத் தொடர்ந்து பிப்ரவரி 14, பட்டியல், எம்டன் மகன், வெயில், கூடல் நகர், நேபாளி, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கண்டேன் காதலை, 555 உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக அசத்தினார்.

கதாநாயகனாக மட்டுமல்லாமல் நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பரத் வானம், கடுகு, ஸ்பைடர் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் கூத்தரா, 1000- ஒரு நோட்டு பறஞ்ச கத, லார்ட் லிவிங்ஸ்டண் 7000 கண்டி மற்றும் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான குருப் உள்ளிட்ட படங்களில் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் பரத் நடிப்பில் வெளிவந்த மிரள் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டில் சோனி லைவ் தளத்தில் நேரடியாக வெளிவந்த ஸ்டோரி ஆஃப் திங்க்ஸ் எனும் ஆந்தாலஜி படத்தில் வேயிங் ஸ்கேல் இன்றைய எபிசோடில் நடித்த பரத், தெலுங்கில் சுதீர் பாபு நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த ஆக்ஷன் திரில்லர் படமான ஹண்ட் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக தமிழில் இயக்குனர் விஜய் ராஜ் இயக்கத்தில் முன்னறிவான் மற்றும் மலையாளத்தில் நடிகர் ரகுமான் கதாநாயகனாக நடித்திருக்கும் சமரா ஆகிய படங்கள் நடிகர் பரத் நடிப்பில் வெளிவர காத்திருக்கின்றன.

2003ல் நடிகராக அறிமுகமாகி இந்த 2023 ஆம் ஆண்டு 20 ஆண்டுகளை வெற்றிகரமாக தனது திரைப்பயணத்தில் கடந்திருக்கும் நடிகர் பரத் தற்போது தனது 50வது திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இயக்குனர் RP.பாலா இயக்கத்தில் பரத் நடித்திருக்கும் இந்த லவ் திரைப்படம் மலையாளத்தில் இதே பெயரில் வெளிவந்த லவ் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். தனது RP ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் RP.பாலா மற்றும் கௌசல்யா பாலா இணைந்து தயாரித்திருக்கும் இந்த லவ் திரைப்படத்திற்கு PG.முத்தையா ஒளிப்பதிவில், அஜய் மனோஜ் படத்தொகுப்பு செய்ய தினேஷ் மோகன் கலை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். ஸ்டன்னர் சாம் அவர்களின் ஸ்டண்ட் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லவ் திரைப்படத்தின் நடன இயக்குனராக சந்தோஷ் பணியாற்ற பாடல்களை AA PA ராஜா எழுதி இருக்கிறார். கடைசியாக பரத் நடிப்பில் வெளிவந்த மிரள் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகை வாணி போஜன் லவ் திரைப்படத்திலும் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் விவேக் பிரசன்னா, ராதாரவி, டேனியல் ஆனி போப், ஸ்வயம் சித்தா, ஆடம்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ரோனி ரபேல் இசை அமைத்திருக்கிறார். இந்த நிலையில் லவ் திரைப்படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லர் தற்போது வெளியானது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த லவ் திரைப்படத்தின் அந்த ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

'இது டைகரின் கட்டளை!'- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட அடுத்த அதிரடி ட்ரீட்... 2வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!
சினிமா

'இது டைகரின் கட்டளை!'- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட அடுத்த அதிரடி ட்ரீட்... 2வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

சந்தானத்தின் ஹாரர் காமெடி ட்ரீட்டாக வரும் DD ரிட்டன்ஸ் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு... கலக்கலான புது GLIMPSE இதோ!
சினிமா

சந்தானத்தின் ஹாரர் காமெடி ட்ரீட்டாக வரும் DD ரிட்டன்ஸ் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு... கலக்கலான புது GLIMPSE இதோ!

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் பட காவாலா பாடல் உருவான விதம்... ரஜினிகாந்த் - தமன்னாவின் ஃட்ரெண்டாகும் மேக்கிங் வீடியோ இதோ!
சினிமா

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் பட காவாலா பாடல் உருவான விதம்... ரஜினிகாந்த் - தமன்னாவின் ஃட்ரெண்டாகும் மேக்கிங் வீடியோ இதோ!