எதார்த்தமான டைமிங் காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் சந்தானம். லொள்ளு சபாவில் நடித்து வந்த நேரத்தில் சிம்புவின் மன்மதன் படம் மூலம் பெரியதிரையில் அறிமுகமானார். ஹீரோக்களுக்கு நண்பனாக நடித்து, இயல்பான காமெடியால் மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளார். ஒரு சில படங்களில் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். 

சந்தானம் மூன்று வேடங்களில் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட் சற்று முன் வெளியாகி உள்ளது

இந்த படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் வைக்காம என்ற சிங்கிள் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜன் என்ற படத்தில் இடம் பெற்ற பாடலின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் யோகி என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா இணைந்து இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சபாபதி. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சந்தானம் பிறந்தநாளில் வெளியிட்டது படக்குழு. இந்த படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சந்தானம் திக்குவாய் கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படம் வருகிற ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருக்கிறது. 

பாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு திரையரங்கில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நகைச்சுவை விரும்பிகள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.