சந்தானம் நடிக்கும் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தை A1 புகழ் ஜான்சன் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆர்துர் வில்சன் ஒளிப்பதிவு, துரை ராஜ் கலை இயக்கம், பிரகாஷ் படத்தொகுப்பு மேற்கொள்கின்றனர். கே. குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது இணையத்தை தெறிக்க விடுகிறது. ஃபர்ஸ்ட் லுக்கிலே கையில் மைக்குடன் அசத்தலாக இருந்தார் சந்தானம். 

இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை இன்று துவங்கியுள்ளார் சந்தானம். நேற்று தான் ஃபர்ஸ்ட் லுக் வந்தது, அதற்குள் எப்படி டப்பிங் ? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து திரை வட்டாரத்தில் விசாரித்த போது, படப்பிடிப்பு ஒரு புறம் நடைபெற்று வருகிறதுதாம், தான் நடித்த காட்சிகள் வரை டப்பிங் செய்து வருகிறார் சந்தானம். 

சமீபத்தில் சிலம்பரசன் நடித்த ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு நடந்ததும் தெரியவில்லை, டப்பிங் பணிகள் முடிந்ததும் தெரியவில்லை. அந்த அளவிற்கு அழகாகவும், வேகமாகவும் செயல்பட்டனர் படக்குழுவினர். தற்போது சிம்புவின் ரூட்டில் சந்தானமும் இறங்கியுள்ளார்  என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.  

இந்த ஆண்டு தீபாவளிக்கு பிஸ்கோத் திரைப்படத்தை வெளியிட்டார் சந்தானம். மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் இயக்கி தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை வெளியிட்டது. ரொமான்டிக் கலந்த காமெடி ஜானரில் உருவான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா படமம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. சினிஷ் தயாரித்த இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதில் சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். 

சந்தானம் போகின்ற வேகத்தை பார்த்தால் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் டீஸர் அல்லது ட்ரைலரை எதிர்பார்க்கலாம் என்ற ஆவலில் உள்ளனர் சந்தானம் ரசிகர்கள்.