பியார் பிரேமா காதல் படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் . விஜய் சேதுபதி நடித்த புரியதா புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இந்த படத்தை இயக்குகிறார். காளி படத்தில் விஜய் ஆன்டனியோடு ஜோடி போட்ட ஷில்பா மஞ்சுநாத் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணோடு நடிக்கிறார் .

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.ஜீரோ படத்தை தயாரித்த மாதவ் மீடியா என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்கிறது.இந்த படம் வரும் 15ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து சண்டாளி என்ற பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.இளைஞர்களின் ஏகோபித்த வரவேற்புக்கு இடையே வெளிவரும் இந்த படம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.