விஷால் தற்போது வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் அயோக்யா படத்தில் நடித்து வருகிறார்.இது தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான டெம்பர் படத்தின் ரீமேக் ஆகும்.இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.

Sana Khan Repalces Sunny Leone in Vishal Rashi Khanna Starrer Ayogya To Hit Screens April

ராஷி கண்ணா இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். பார்த்திபன்,கே.எஸ்.ரவிக்குமார்,சோனியா அகர்வால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட பிரபல நடிகை சன்னி லியோனை படக்குழு அணுகியது.சம்பளம் மற்றும் கால்ஷீட் பிரச்சனையால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை.

Sana Khan Repalces Sunny Leone in Vishal Rashi Khanna Starrer Ayogya To Hit Screens April

இதையடுத்து பல நடிகைகளை படக்குழு அணுகியுள்ளனர்.தற்போது சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த சனாகான் இந்த படத்தில் கமிட் ஆகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இவர் சன்னி லியோன் நடனமாட இருந்த பாடலில் ஆட ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.இந்த பாடலின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sana Khan Repalces Sunny Leone in Vishal Rashi Khanna Starrer Ayogya To Hit Screens April