'சாகுந்தலம் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கண் கலங்கியது ஏன்?'- உண்மையை உடைத்த சமந்தாவின் எமோஷனலான பேட்டி இதோ!

சாகுந்தலம் பட விழாவில் கண் கலங்கியது குறித்து பேசிய சமந்தா,samantha opens about emotional on shaakuntalam trailer launch | Galatta

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகள் ஒருவராகவும் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாகவும் திகழும் நடிகை சமந்தா தற்போது முதல் முறையாக ஹாலிவுட்டில் களமிறங்கியுள்ளார். ஹாலிவுட் பிரபல இயக்குனர் ஃபிலிப் ஜான் இயக்கத்தில் அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் எனும் ஆங்கில படத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார். முன்னதாக ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா - ரிச்சர்ட மேடன் நடிப்பில் தயாராகியுள்ள சைட்டாடெல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனாக தயாராகும் சைட்டாடெல் வெப் சீரிஸில் ஃபேமிலி மேன் வெப் சீரிஸ்க்கு பிறகு மீண்டும் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி கே இயக்கத்தில் சமந்தா தற்போது நடித்து வருகிறார். தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்துள்ள சமந்தா ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னர் படமாக தயாராகும் குஷி திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

இதனிடையே இதிகாச கதாபாத்திரமான சகுந்தலா கதாபாத்திரத்தை மையப்படுத்தி இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள திரைப்படம் சாகுந்தலம். குணா டீம் ஒர்க்ஸ் சார்பில், தயாரிப்பாளர் நீலிமா குணா தெலுங்கில்  தயாரித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்தில் நடிகை சமந்தா சகுந்தலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தேவ் மோகன், மோகன் பாபு, அதிதி பாலன், பிரகாஷ் ராஜ், கௌதமி ஆகியோர் சாகுந்தலம் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாகுந்தலம் திரைப்படத்திற்கு சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு செய்ய, மணிசர்மா இசையமைத்துள்ளார். வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் வெளியிடும் சாகுந்தலம் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இதனிடையே சாகுந்தலம் திரைப்படத்தின் சிறப்பு நேர்காணலில் பேசிய நடிகை சமந்தா பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவரிடம் சாகுந்தலம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவின் போது முதல் முறையாக நீங்கள் எமோஷனலானீர்கள் ஏன்? எனக் கேட்டபோது, “எல்லோரும் நினைத்துக் கொண்டார்கள் நான் எனக்காக அழுதேன் என்று… இயக்குனர் குணசேகர் சார் அழுதார் அவரைப் பார்த்து நான் அழுது விட்டேன். எனக்கு தெரியும் அவர் ஏன் எமோஷனல் ஆனார் என்று, எனக்கு தெரியும் அவர் எவ்வளவு கடின உழைப்பை போட்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல மொத்த அணியும் ஒரு குடும்பமாக... ஒவ்வொரு விஷயமும் ஒரு புல்லிலிருந்து மிகப்பெரிய அரண்மனை வரை அனைத்தும் அதனுடைய இதயத்தையும் ஆன்மாவையும் படத்திற்காக கொடுத்திருக்கிறது. எனக்கு அவர் அழும் போது எனக்கு தெரியும் அது ஏன் என்று.. அவர் ஏன் உடைந்தார் என்றும் இது எத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டது என்றும்… இந்தப் படத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்றும்... எனவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு எப்படி இந்த படம் இருக்க வேண்டுமோ அப்படி படத்தை அவர் எடுத்திருக்கிறார். எந்த பிரச்சனைகளும் இல்லாமல் எடுத்திருக்கிறார். அதற்கு நான் தில் ராஜூ சார் அவர்களை பாராட்ட வேண்டும். ஒரு கதாநாயகியை வைத்து இந்த மாதிரியான ஒரு பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை யாரும் தயாரிக்க மாட்டார்கள். சில வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு விஷயத்தை கேட்டிருக்க கூட மாட்டோம்... நாங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம் என்பது இதில் சிறப்பான ஒரு விஷயம். நான் அவரை தெரிந்து கொண்டேன்… அவர் தில் ராஜூ சாரை தெரிந்து கொண்டார்… நாங்கள் இந்த அற்புதமான படத்தை உருவாக்கினோம்.” என நடிகை சமந்தா பதிலளித்துள்ளார். அந்த முழு பேட்டி இதோ…

 

அஜித் குமாரின் வீட்டில் சூர்யா & கார்த்தி... தந்தை மறைவுக்கு நேரில் சென்று துக்கம் விசாரிப்பு! வைரல் வீடியோ
சினிமா

அஜித் குமாரின் வீட்டில் சூர்யா & கார்த்தி... தந்தை மறைவுக்கு நேரில் சென்று துக்கம் விசாரிப்பு! வைரல் வீடியோ

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 உடன் கைகோர்க்கும் உலகநாயகன் கமல்ஹாசன்! அட்டகாசமான அறிவிப்பு இதோ
சினிமா

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 உடன் கைகோர்க்கும் உலகநாயகன் கமல்ஹாசன்! அட்டகாசமான அறிவிப்பு இதோ

பொன்னியின் செல்வன் 2 பட ரிலீஸுக்கு கிடைத்த பெரிய பூஸ்ட்... அதிரடியான அதிகாரப்பூர்வ அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!
சினிமா

பொன்னியின் செல்வன் 2 பட ரிலீஸுக்கு கிடைத்த பெரிய பூஸ்ட்... அதிரடியான அதிகாரப்பூர்வ அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!