“நான் பாத்திரம் கழுவிருக்கேன்.. டீ, காபி கொடுத்துருக்கேன்..” மனம் திறந்த இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் – வைரலாகும் Motivational வீடியோ இதோ..

உத்வேகம் கொடுக்கும் ஏ ஆர் முருகதாஸ் பேச்சு வைரல் வீடியோ இதோ - Director Murugadoss motivational video | Galatta

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான் இயக்குனர்களில் ஒருவர் ஏஆர் முருகதாஸ். சமூக அக்கறையை கொண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்கள் மெகா ஹிட் அடித்துள்ளது. அதன்படி ரமணா, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, ஸ்படைர் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் ஏ ஆர் முருகதாஸ் பிரபலம். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் எழுத்தாலராகவும் தயாரிப்பாலாரகவும் திரைத்துறையில் பணியாற்றியுள்ளார். அதன்படி தயாரிப்பாளராக ஏ ஆர் முருகதாஸ் தேர்ந்தெடுத்து தயாரிக்க்கும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இதுவரை பெற்றுள்ளது. எங்கேயும் எப்போதும், ‘வத்திக்குச்சி, ‘ராஜா ராணி, ‘மான் கராத்தே, ‘பத்து என்றதுக்குள்ள,’ரங்கூன், போன்ற படங்கள் ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படங்கள். இந்த வரிசையில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அடுத்ததாக தயாரிக்கும் திரைப்படம் ‘16 ஆகஸ்ட் 1947’ .

இயக்குனர் என்எஸ் பொன்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்க இவருடன் குக்கு வித் கோமாளி புகழ் மற்றும் ரிச்சர்ட் ஆண்டர்சன், ரேவதி ஷர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் சியான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சுதந்திர போராட்டத்தை மையமாக எடுக்கப்பட்ட இப்படத்தின் டிரைலர் பாடல்கள் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் 7ம் தேதி திரையரங்குகளில் வரவிருக்கின்றது.

இந்நிலையில்  16 ஆகஸ்ட் 1947 படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் பட தயாரிப்பாளர் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் பேசியது,

"பொதுவா சொல்வார்கள், நாம் கடவுளிடம் கேட்பது எல்லாம் இன்னொரு மனுஷனால் கொடுக்க முடியவை தான். அதை ஒரு மனுஷனே செய்தால் கடவுளுடைய வேலையை செய்வதாக அர்த்தம். அந்த மாதிரி எனக்கு 100 பேர் உதவி செஞ்சிருக்காங்க.. என்னுடைய முழு வளம் எல்லாம் ஏ ஆர் முருகதாஸ் என்ற ஒருத்தர் இல்ல..  இந்த உலகத்தில் தனி மனிதன் Self-made என்ற விஷயமே பொய்யானது. 100 பேர் உதவி செஞ்சாதான் ஒரு இடத்திற்கு வர முடியும். நான் இன்னிக்கு இந்த மேடையில் இருக்கிறேன் என்றால் அது 100 பேர் எனக்கு கொடுத்த கை. நான் 10 பேருக்கு சாப்பாடு போட்டுருக்கேன் பாத்திரம் கழுவிருக்கேன்.‌ டீ , காபி என பத்து பேருக்கு கொடுத்திருக்கேன். அதுக்குபின் அவங்க பேசுறத தான் வசனம் எழுதினேன். அப்படிதான் ஒருநிலைக்கு வர முடியும்.இதெல்லாம் நான் சந்தோஷமாதான் பண்ணேன்.  கேமிராவை கண்டுபிடிக்கறவன்தான் பயப்படனும் நாம படம் எடுக்க வந்துள்ளோம். வாழ்கையின் கதையை 60 காட்சிகளாக கோர்த்து கொடுக்க போறோம். அது எல்லோராலும் முடியும். அதற்கு சரியான கை கொடுத்து மேலேற்ற ஒரு ஆள் வேண்டும் அவ்வளவு தான்.

பொன்குமார் நல்லவர் என்றால் அவருக்கு கை கொடுக்கலாம், சாப்பாடு கொடுக்கலாம். ஆனால் வல்லவனுக்கு தான் வாய்ப்பு கொடுக்க முடியும். பொன்குமார் இப்போ இந்த நிலைக்கு வந்துருக்காரு னா முழுக்க முழுக்க அவர் உழைப்பு தான். ‌அவர் உழைப்பிற்கு ஊக்கமாக கை கொடுத்திருக்கோம். பொன்குமார் படம் கண்டிப்பா ஜெயிக்கும். 1947 படத்தில் என்ன நல்லது இருந்தாலும் பொன்குமாரை பாராட்டுக்கள். ஏதாவது தவறு இருந்தால் என்னை திட்டுங்கள். என்கிட்ட இருந்து கத்துக்கிட்டான் என்று குறிப்பிட்டு.. நான் ஏன் அப்படி சொல்றேன்னா.. நீங்க திட்றதுக்கு இதுல வாய்பே இருக்காது.‌நான் படம் பார்த்து விட்டேன்.” என்றார்.

மேலும் பல நிகழ்வுகள் குறித்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பகிர்ந்த சுவாரஸ்யமான நிகழ்வு இதோ..

“யாரையாவது டேட்டிங் செய்யலாமே?” என்ற கேள்விக்கு சமந்தா கொடுத்த பதில் – ரசிகர்களிடையே வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“யாரையாவது டேட்டிங் செய்யலாமே?” என்ற கேள்விக்கு சமந்தா கொடுத்த பதில் – ரசிகர்களிடையே வைரலாகும் பதிவு இதோ..

சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை.. அதிர்ச்சியில் திரையுலகம் - நடந்தது என்ன? விவரம் இதோ..
சினிமா

சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை.. அதிர்ச்சியில் திரையுலகம் - நடந்தது என்ன? விவரம் இதோ..

“என்னை அரசியலுக்கு இழுக்காதீர்கள்... உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது” வைரலாகும் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் பதிவு – விவரம் இதோ..
சினிமா

“என்னை அரசியலுக்கு இழுக்காதீர்கள்... உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது” வைரலாகும் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் பதிவு – விவரம் இதோ..