தெலுங்கு சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற படங்களில் ஒன்று மஜிலி.ஷிவா நிர்வாணா இயக்கியுள்ள இந்த படம் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கோபி சுந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

2017-ல் திருமணம் நடந்த பிறகு சமந்தாவும்,நாக சைதன்யாவும் இணையும் முதல் படம் இது தான்.இந்த படத்தின் first look வெளியீட்டில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.அந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்

இந்த படத்தில் நாகா சைதன்யா ஒரு கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். சமந்தா-நாக சைதன்யா இருவரும் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளனர்.இந்தபடமும் அவர்கள் இருவருக்கும் வெற்றி படமாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.