"RRR" நாயகன் ஜூனியர் NTRன் அதிரடியான தேவரா... சைஃப் அலி கான் பிறந்தநாளுக்கு படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர் இதோ!

ஜூனியர் NTRன் தேவரா பட சைஃப் அலி கான் கேரக்டர் போஸ்டர்,saif ali khan character poster from jr ntr in devara movie | Galatta

நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தயாராகி வரும் தேவரா படத்தில் இருந்து நடிகர் சைஃப் அலி கானின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் அதிரடியான போஸ்டர் வெளியானது. தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் RRR. பிரம்மாண்ட இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்த RRR திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று இந்திய பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனைகள் படைத்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் ஒரு திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

இந்த வரிசையில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் தான் தேவரா. ஜூனியர் என்டிஆர் தனது திரைப் பயணத்தில் 30-வது திரைப்படமாக தயாராகும் தேவரா படத்தில் தற்போது கதையின் நாயகனாக நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவின் மாஸ் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் இருவரும் இணைந்து நடித்த ஆச்சார்யா திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அடுத்ததாக தற்போது ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா படத்தை இயக்குகிறார். பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மிரட்டலான வில்லனாக நடிக்கும் தேவரா படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஸ்ரீகாந்த், பிரகாஷ்ராஜ், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, கலையரசன் மற்றும் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய இடங்களில் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவில் ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய இருக்கும் தேவரா படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார். 

என் டி ஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கும் தேவரா திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த தேவரா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது தேவரா படத்தில் வில்லனாக நடிக்கும் சைஃப் அலி கானின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் புதிய போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். முன்னணி பாலிவுட் நடிகரான சைஃப் அலி கான் இன்று ஆகஸ்ட் 16ஆம் தேதி தனது 53 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு கலாட்டா குழுமம் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில், "பைரா" என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக குறிப்பிட்டு அந்த கதாபாத்திரத்தின் மிரட்டலான போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளது தேவரா படக்குழு. அட்டகாசமான அந்த போஸ்டர் இதோ…
 

BHAIRA

Happy Birthday Saif sir !#Devara pic.twitter.com/DovAh2Y781

— Jr NTR (@tarak9999) August 16, 2023