“இந்த உடம்ப வெச்சிட்டு என்னால நடிக்க முடியல”.. விஜய் சேதுபதி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் - ஃபர்ஸி குழுவினருடன் சிறப்பு பேட்டி இதோ..

உடல் எடை மாற்றம் குறித்து விஜய் சேதுபதி பகிர்ந்த தகவல் - Vijay Sethupathi about his body transformation | Galatta

சர்ச்சைகளை கிளப்பிய ‘ஃபேமிலி மேன்’ தொடரை இயக்கிய கூட்டணி இயக்குனர் ராஜ் மற்றும் டிகே அவர்களின் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் மற்றும்  விஜய் சேதுபதி இணைந்து நடித்த இணைய தொடர் ஃபர்ஸி’. மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் இந்தி, தமிழ் மொழிகளில் வரும் பிப்ரவரி 10 ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கின்றனர். இந்நிலையில் தொடர் குறித்தும் தொடரில் பணியாற்றிய அனுபவம் குறித்தும் இயக்குனர் ராஜ் மற்றும் டிகே, நடிகர்கள் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நமது கலாட்டா பிளஸ் பேட்டியில் கலந்து கொண்டு பகிர்ந்தனர்.  பேட்டியில் உடல் எடையில்  எப்படி முன்பை விட பெரிதளவு மாற்றத்தை கொண்டு வர முடிந்தது? என்ன உங்களுக்கு ஊக்கமளித்தது என விஜய் சேதுபதியிடம் கேட்கையில் அதற்கு அவர்,

"எனது பழைய புகைப்படங்கள் தான் அதற்கு காரணம். தொடர்ந்து பட வேலைகள் இருப்பதால் உடற்பயிற்சி செய்வதில் அசட்டுத்தனம் ஏற்பட்டு விட்டது. உணவு கட்டுப்பாடு திட்டங்களிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு நல்ல சிறந்த ருசியான உணவுகளை சாப்பிட பிடிக்கும். நல்ல ருசியான உணவுகளை சாப்பிடவில்லை என்றால் ருசியான வாழ்க்கை அமையாது என்று நம்புகிறவன் நான். கடந்த சில ஆண்டுகளாக என் உடல் கொண்டு என்னால் நடிக்க முடியவில்லை. சில கதாபாத்திரங்களுக்கு அது பொருந்தியது. இருந்தாலும் அது என்னை வருத்தியது. அதனால் முடிவு செய்தேன் உடல் எடை குறைக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஆண்டும்.. ஒவ்வொரு மாதமும் என் உடல் எடையை குறைப்பேன் என்று சத்தியத்தை கையிலெடுப்பேன். ஆனால் நிறைய தடைகள் ஏற்பட்டு அது அப்படியே நின்றுவிடும். இந்த முறை எப்படியோ செய்து விட்டேன். சிக்ஸ் பேக் வைக்கும் அளவு இல்லையென்றாலும் சாதாரணமாக ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்." என்று குறிப்பிட்டார்.

மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்ட படக்குழுவினரின் முழு வீடியோ இதோ..

பட்டையை கிளப்பும் வாத்தி பட பாடல்கள்.. ஜிவி பிரகாஷ் பகிர்ந்த Good News.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

பட்டையை கிளப்பும் வாத்தி பட பாடல்கள்.. ஜிவி பிரகாஷ் பகிர்ந்த Good News.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் பதிவு இதோ..

பிரபல நடிகருடன் கூட்டணி அமைத்த வாரிசு பட தயாரிப்பாளர்.. -  ரசிகர்கள் கொண்டாட்டம்.. அட்டகாசமான அப்டேட் இதோ..
சினிமா

பிரபல நடிகருடன் கூட்டணி அமைத்த வாரிசு பட தயாரிப்பாளர்.. - ரசிகர்கள் கொண்டாட்டம்.. அட்டகாசமான அப்டேட் இதோ..

அட்டகாசமான நடிப்பில் கவின்.. வெளியானது டாடா படத்தின் டிரைலர் - ரசிகர்களால் வைரலாகி வரும் டிரைலர் & பாடல் இதோ..
சினிமா

அட்டகாசமான நடிப்பில் கவின்.. வெளியானது டாடா படத்தின் டிரைலர் - ரசிகர்களால் வைரலாகி வரும் டிரைலர் & பாடல் இதோ..