தளபதி விஜயின் லியோ பட காஷ்மீர் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் அப்டேட்... ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ!

தளபதி விஜயின் லியோ பட புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்,Thalapathy vijay lokesh kanagaraj in leo movie shooting spot photo | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தளபதி 67 திரைப்படத்தின் டைட்டிலான லியோ கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி வந்தது. லியோ டைட்டிலை அறிவிக்கும் வகையில் தளபதி விஜயின் பக்கா மாஸ் - கிளாஸான ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தது படக்குழு.

விக்ரம் படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்தும் மாஸ்டர் படத்திற்கு பின் மீண்டும் தளபதி விஜயுடன் இணைவதும் என மிகப் பெரிய பொறுப்புகளோடு களமிறங்கியிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ திரைப்படம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ம் தேதி தொடங்கி தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் ஃபேவரட் ஜோடியான தளபதி விஜய் மற்றும் திரிஷா ஜோடி 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஸ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் என ஒரு நடிகர்கள் பட்டாளமே நடிக்கும் லியோ திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் மிகவும் விரும்பும் நடிகர் என தெரிவித்த மன்சூர் அலி கானும் இடம்பெற்று இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, ஃபிலோமின் ராஜின் படத்தொகுப்பு, அன்பறிவு மாஸ்டர்களின் ஸ்டன்ட் இயக்கம், சதீஷ்குமாரின் கலை இயக்கம், தினேஷ் மாஸ்டரின் நடனம் எனத் தேர்ந்த தொழில்நுட்பக்குழு லியோ திரைப்படத்தை இன்னும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என தெரிகிறது.

இந்நிலையில் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புதிய புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. பனி படர்ந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் நின்றிருக்கும் அந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பகிரகப்பட்டு வருகிறது. தினேஷ் மாஸ்டர் இடம்பெற்று இருப்பதால் பனி நிறைந்த இடத்தில் தளபதி விஜயின் ஸ்டைலான நடனத்தோடு பாடல் காட்சி படமாக்கப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…
 

Dinesh Master from the shooting location of #Leo ❄️☃️⛄️ pic.twitter.com/ydm6cttUfh

— KARTHIK DP (@dp_karthik) February 5, 2023

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இணைந்த பிகில் பட நடிகர்... செம்ம மாஸ் அறிவிப்பு இதோ!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இணைந்த பிகில் பட நடிகர்... செம்ம மாஸ் அறிவிப்பு இதோ!

தளபதி விஜயின் வாரிசு பட கொண்டாட்டம்... ஸ்பெஷல் ட்ரீட்டாக படக்குழு வெளியிட்ட அட்டகாசமான வீடியோ இதோ!
சினிமா

தளபதி விஜயின் வாரிசு பட கொண்டாட்டம்... ஸ்பெஷல் ட்ரீட்டாக படக்குழு வெளியிட்ட அட்டகாசமான வீடியோ இதோ!

சமூகத்தில் பாலினம் வைத்து அறிமுகப்படுத்தக் கூடாது... பிக்பாஸ் ஷிவின் எதிர்பார்க்கும் மாற்றம் இதுதான்! விவரம் உள்ளே
சினிமா

சமூகத்தில் பாலினம் வைத்து அறிமுகப்படுத்தக் கூடாது... பிக்பாஸ் ஷிவின் எதிர்பார்க்கும் மாற்றம் இதுதான்! விவரம் உள்ளே