ரெபெல் ஆடியோ வழங்கும் STR நடித்திருக்கும் ‘பெரியார் குத்து’ ஆல்பம் வெளிவந்து அனைவரையும் ஈர்த்து வருகிறது. லைக்கா தயாரிப்பில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கும் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்துக் கொண்டிருக்கிறார். 

நடிப்பு மட்டுமின்றி, நடனம், பாடல்களிலும் சிம்புவுக்கு விருப்பமதிகம் என்பதால் அடிக்கடி ஆல்பங்களை வெளியிடுவதை சிம்பு வழக்கமாக வைத்துள்ளார்.

உலக புகழ் பெற்ற பாடகர் Akon உடன் லவ் அந்தம் பாடலை தொடர்ந்து தற்போது பெரியார் குத்து எனும் பாடலை தந்திருக்கிறார்.அவ்வகையில் பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரிகளில், ரமேஷ் தமிழ்மணி இசையமைப்பில் ‘பெரியார் குத்து’ என்ற ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார் சிம்பு.

திராவிட மண்ணின் மைந்தனான சிம்புவின் இப்பாடல் நிச்சயம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் விரைவில் லவ் அந்தம் பாடலையும் வெளியிடுவார் என ஆர்வத்தில் உள்ளனர் அவரது ரசிகர்கள்.