சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படத்தை AR முருகதாஸ் இயக்க உள்ளார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகிபாபு பிரதீக், சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், நிவேதா தாமஸ், யோக்ராஜ் சிங் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ளனர். 

Rajinikanths Darbar Movie Opening Song Crooned By SPBalasubramaniam

பேட்ட படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த நிஹாரிகா பசின் கான் இந்த படத்தில் காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்ற உள்ளார். படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியது. மிகவும் ஸ்டைலிஷாக உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்.

Rajinikanths Darbar Movie Opening Song Crooned By SPBalasubramaniam

தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கை ஜீவா இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் தெரியவந்தது. மேலும் யோகிபாபுவின் காட்சிகள் முடிவடைந்தது என தெரியவந்தது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஓப்பனிங் சாங்கை SP பாலசுப்ரமணியம் பாடியுள்ளாராம்.

Rajinikanths Darbar Movie Opening Song Crooned By SPBalasubramaniam

ரஜினி படத்திற்கு SP பாலசுப்ரமணியம் முதல் பாடல் என்பது எமோஷன். பேட்ட படத்தில் சில வரிகள் மட்டுமே பாடியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆகையால் இதில் முழு பாடலையும் பாடவுள்ளார் என்று கூறியிருக்கிறார். காவலதிகாரியாக வரும் ரஜினிகாந்த் மக்களை பார்த்து, இந்த காக்கி சட்டையை கழட்டி விட்டால் நானும் உங்களில் ஒருவன் தான் என்று பாடலை ஆரம்பிப்பாரம்.