சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் தீபாவளி சரவெடியாக திரைக்கு வரவிருக்கும் படம் சர்க்கார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், யோகிபாபு, ராதா ரவி, பல. கருப்பையா ஆகியோர் தளபதியுடன் இணைந்து நடித்துள்ளனர். 

Radha Ravi Reveals Vijay Is The Only Personality After MGR And Rajinikanth To Act In Society Connected Movies

சமீபத்தில் நடிகர் ராதாரவி அவர்கள் அளித்த பேட்டியில் தளபதியுடன் சர்க்கார் படத்தில் பணிபுரிந்த அனுபவங்கள் பற்றி பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில் விஜய் அவர்களின் எளிமை பற்றியும், கதாப்பாத்திரத்தை உள்வாங்கி நடிப்பது தான் நடிப்பு அதை சரியான முறையில் தளபதி செய்து வருகிறார் என்றும் தெரிவித்தார்.

Radha Ravi Reveals Vijay Is The Only Personality After MGR And Rajinikanth To Act In Society Connected Movies

படப்பிடிப்பு தளத்தில் ஓய்வின் போது கேரவானில் உறங்காமல் அங்கேயே ஓய்வெடுப்பாராம். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறகு சமுதாயதிற்கு தேவையான கருத்துக்களை கொண்ட படங்களை நடித்து வருவது தளபதி விஜய் தான் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.