தமிழ் சினிமாவின் ஜீனியஸ் என்றழைக்கப்படும் இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் புதுப்பேட்டை. தமிழ் சினிமாவில் சிறந்த கேங்க்ஸ்டர் படங்களில் இப்படத்திற்கு இன்றளவும் பெரிதும் வரவேற்புண்டு. 

Pudhupettai The Survival Of Fittest To Rerelease In Screen On November 4 Fans Going Crazy

யுவனின் துள்ளலான இசை கொண்ட இப்படத்தில் நடிகர் தனுஷ் கொக்கி குமார் என்ற கேரக்டராகவே வாழ்ந்திருப்பார். மேலும் சினேகா, சோனியா அகர்வால், மற்றும் இப்படத்தில் நடித்த ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் போன்ற அனைத்து நடிகர்களும் தங்களது சிறப்பான நடிப்பில் அனைவரையும் கவர்ந்திருப்பர்.

Pudhupettai The Survival Of Fittest To Rerelease In Screen On November 4 Fans Going Crazy

தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால் இப்படம் சென்னை மஹாராணி திரையரங்கில் வரும் நவம்பர் 4-ஆம் தேதி மாலை 6 மணியளவில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இச்செய்தி அனைத்து சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Pudhupettai The Survival Of Fittest To Rerelease In Screen On November 4 Fans Going Crazy

காலத்தால் அழியாத கல்வெட்டாக விளங்கும் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவராதா ? என்ற ஏக்கத்தில் உள்ளனர் சினிமா ரசிகர்கள்.

Pudhupettai The Survival Of Fittest To Rerelease In Screen On November 4 Fans Going Crazy